ஈஷா யோகா மையத்தில் பெண்கள் விவகாரம்!....உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.  அந்த வழக்கில், கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா மையத்தில் யோகா படிக்க சென்ற தனது 2 மகள்களையும் பார்க்க முடியவில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஈஷா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று கேள்வி எழுப்பியது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  ஈஷா மையம் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஈஷா மையம் தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை உயர் தடை விதித்ததோடு, போலீசாரை பதில் அளிக்க உத்தரவிட்ட நிலையில்,  தமிழக போலீசார் நேற்று பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில்  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  ஈஷா யோகா மைய விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய தடையில்லை என்றும், ஆட்கொணர்வு மனுவில் கூடுதல் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று கூறி மனுவின் விசாரணையை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women issue at isha yoga center supreme court sensational verdict


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->