மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல்! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சற்றுமுன் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த மசோதாவின் பிரதி வெளியீடப்பட்டுள்ளது. அதில், 128வது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுகிறது.

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது/தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது.

மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டாலும் 2024 மக்களவைத் தேர்தலில் இதனை நடைமுறைப்படுத்த முடியாது.

தொகுதி மறுவரையின்படி, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை  மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் அதிகரிக்கப்படலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womens reservation bill Special session Parliament


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->