உலக கோப்பை 2023: 6,000 காவலா்கள் பாதுகாப்பு! அகமதாபாத் காவல் ஆணையா் தகவல்! - Seithipunal
Seithipunal


குஜராத், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. 

இதற்காக 6000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் நேற்று தெரிவித்தார். 

பொது ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தை காண்பதற்காக மைதானத்திற்கு வர உள்ளனர். 

1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் வர உள்ளதால் மாநில காவல்துறையினர், ஊர்காவல் படையினர், அதிவிரைவு படை வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பார்வையாளர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக 6000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களின் 3000 பேர் மைதானத்துக்கு உள்ளேயும் மற்றவர்கள் முக்கிய தலைவர்கள் தங்கியுள்ள ஹோட்டல் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 

ஐஜி., டிஐஜி போன்ற உயர் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்குவர். எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். 

பிற நாடுகளில் இருந்து வரும் மிரட்டல்களை ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன. அவற்றிற்கு எந்தவித முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என கருதுகிறேன் என்றார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup 2023 6000 security guards


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->