பராமரிப்பு பணிகள் காரணமாக 140 இரயில் சேவைகள் ரத்து.. பொதுமக்கள் கடும் அவதி.! - Seithipunal
Seithipunal


நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் தண்டவாளங்களில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ரயில்வேதுறை களமிறங்கியுள்ளது. நேற்று நாடு முழுவதும் இந்த பராமரிப்பு பணிகள்  நடைபெற்றன.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று நாடு முழுவதும் 103 ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. 35 ரயில்கள் பகுதிநேர அளவில் ரத்து செய்யப்பட்டன. ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ், சோலாப்பூர் எக்ஸ்பிரஸ், சூலூர்பேட்டை - சென்னை விரைவு ரயில் உள்ளிட்ட பல சேவைகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும், முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி தளத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவை ரத்து செய்வது உள்ளிட்டவற்றை செய்ய முடியாமல் போனதாக பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yesterday 140 train services canceled due to maintenance work


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->