போலீசாரிடம் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர் - அதிரவைத்த பின்னணி.!
youth arrested for kanja sales in thane kalyan
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் கோவிந்த்வாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பஜார்பேட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் அப்பகுதியில் நடமாடி வந்துள்ளார். இதைப்பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் பீட் மாவட்டத்தை சேர்ந்த சகில் சேக் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் வைத்திருந்த உடைமையை பிரித்து சோதனை செய்த போது, அதில் 12 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested for kanja sales in thane kalyan