கொடூரம்! தனியாக இருந்த 85 வயது மூதாட்டி! பலாத்காரம் செய்ய கொன்ற வாலிபர் கைது!
Youth arrested for raping and murdering 85 year old woman in Uttar Pradesh
உத்திரபிரதேசத்தில் 85 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் பரேலி அருகே உள்ள ஹபீஸ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப் பகுதியில் மகனை இழந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த மூதாட்டியின் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் வீடுகளில் வசித்து வருகின்றனர். இருந்த போதிலும் மூதாட்டி தனியாக வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை நன்கு அறிந்த அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் சம்பவத்தன்று மூதாட்டியின் வீட்டிற்கு அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளர். பின்னர் மூதாட்டியின் வாயை அடைத்து கீழே தள்ளி பலாத்காரம் செய்துள்ளார்.
ராகேஷ் மூதாட்டி பலாத்காரம் செய்து கொண்டிருந்தபோது மூதாட்டியின் உறவுக்கார பெண் அந்த வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்து அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதனை கண்ட ராகேஷ் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
அந்த இளம் பெண் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மூதாட்டி பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்காக பதிவு செய்து தனிப்படை அமைத்து ராகேஷ் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் மறைந்த ராகேஷ்சை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Youth arrested for raping and murdering 85 year old woman in Uttar Pradesh