நவராத்திரி விழா - நடனம் ஆடி கொண்டிருந்த வாலிபர் பலி.!
youth died dance in navaratiri function at gujarat
நவராத்திரி விழா - நடனம் ஆடி கொண்டிருந்த வாலிபர் பலி.!
தற்போது நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாக கர்பா நடனமாவது வழக்கம். இந்த நடனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அனைத்து தரப்பினரும் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில், குஜராத் மாநிலம் கப்பத்பஞ்ச் கேடா மாவட்டத்தில், மைதானம் ஒன்றில் கர்பா நடனம் நடைபெற்று வந்தது. இந்த நடனத்தில் 17 வயதுடைய வீர்ஷா என்ற மாணவனும் பங்கேற்று நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென தனக்கு மயக்கம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு மாரடைப்பு தான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கர்பா நடனம் ஆடிய போது வாலிபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைக்கும் கர்பா நடனம் ஆடிய போது பத்து பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
youth died dance in navaratiri function at gujarat