இது உங்கள் சொத்து - சினிமா பாணியில் அரசு பேருந்தை கடத்திய வாலிபர்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் பினீஷ். லாரி ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் புனலூருக்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் தென்மலைக்குச் செல்வதற்காக மதுபோதையில் புனலூர் பேருந்து நிலையத்துக்கு வந்தார். 

அவரிடம் அங்கு இருந்தவர்கள், 'இரவு நேரத்தில் தென்மலைக்கு பேருந்து சேவை கிடையாது. காலையில் தான் செல்ல முடியும்' என்றுக் கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று யோசித்த பினீஷ் சுற்றும் முற்றும் பார்த்தார்.

அப்போது, அருகே உள்ள போக்குவரத்து பணிமனையில் இடம் பற்றாக்குறை காரணமாக இரவு நேரங்களில் பேருந்துகளை சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதைப்பார்த்த பினீஸ் உடனே அங்குச சென்று ஒரு பேருந்தில் ஏறி அதனை வீட்டை நோக்கி ஓட்டி சென்றார். புறப்பட்ட அவசரத்தில் பினீஸ் பேருந்தின் முகப்பு விளக்கை எரிய வைக்க மறந்து விட்டார்.

இந்த நிலையில், சிறிது தூரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் முகப்பு விளக்கு இல்லாமல் ஒரு அரசு பேருந்து வருவதை பார்த்து சந்தேகமடைந்து பேருந்தை நிறுத்துமாறு தெரிவித்தனர். ஆனால், பினீஸ் போலீசாரை கண்டதும் பேருந்தை நிறுத்தி விட்டு இறங்கி அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். 

உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது வீட்டுக்கு செல்ல வாகன வசதி இல்லாததால் அரசு பேருந்தைக் கடத்தி வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பினீசை கைது செய்து கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth kidnap government bus in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->