புகையிலையை மென்று துப்பியதால் வாலிபர் கொலை..!
Youth killed by chewing tobacco out
பஞ்சாப் மாநிலத்தில், அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் புனித கோவில் எனப்படும் பொற்கோவில் அமைந்த பகுதியில் உள்ள தெரு ஒன்றில் ஹர்மன்ஜீத் சிங் என்ற வாலிபர் தனது பைக்கில் நின்று கொண்டிருந்தார்.
சாத்திவிந்த் பகுதியை சேர்ந்தவரான இவர், புகையிலையை மென்று கொண்டும், குடிபோதையில் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டும் உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு நிஹாங் சீக்கியர்கள் இருவர் ஹர்மன்ஜீத் சிங்கை நெருங்கியுள்ளனர்.
இந்த இரண்டு சீக்கியர்கள் மற்ற சீக்கியர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். இவர்களுக்கென ஒரு தனி குறிக்கோளுடன் இருப்பவர்கள். குரு கோவிந்த் சிங் போரின்போது, அணிந்தது போன்ற நீல வண்ண ஆடைகளை அணியும் வழக்கத்தை உடையவர்கள். இவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. இவர்களுக்கு புகைப் பிடிப்பவர்களையும் பிடிப்பதில்லை என பல தனிப்பட்ட கொள்கைகளை உடையவர்கள். இந்நிலையில், ஹர்மன்ஜீத் சிங்கை நெருங்கிய சீக்கியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீக்கியர் தன்னிடம் இருந்த வாள் ஒன்றை எடுத்து அந்த வாலிபரை நெருங்கி சென்றனர்.
இந்நிலையில், திடீரென கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொள்கின்றனர். சம்பவ பகுதியில் நின்றிருந்த சீக்கியர் ஒருவர் உள்ளே புகுந்து ஹர்மன்ஜீத் சிங்கை கடுமையாக தாக்குகிறார். இதில், காயமடைந்த ஹர்மன்ஜீத் சிங் தெருவோரம் விழுகிறார்.
மேலும், தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த காட்சிகள் அனைத்தும் அருகேயுள்ள ஓட்டல் ஒன்றில் இருந்த சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளது. எனினும், அந்த பகுதியில் நேற்று இரவு முழுவதும் அவரது உடல் கிடந்து உள்ளது. மறுநாள் காலையில் தகவல் அறிந்து போலீசார் வந்த பின்னரே வாலிபர் உயிரிழந்த விவரம் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி காவல் ஆணையாளர் அருண்பால் சிங் தெரிவிக்கும்போது, சம்பவம் நடந்தபோது அந்த பகுதியில் 6 முதல் 7 பேர் நின்றுகொண்டிருந்தனர். ஆனால், ஒருவர் கூட எங்களை அழைக்கவில்லை என்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, ஹர்மன்ஜீத் சிங்கின் தாயார் தெரிவிக்கும்போது, விரைவில் வெளிநாட்டுக்கு செல்லும் முடிவுடன் தனது மகன் இருந்த விவரங்களை தெரிவித்த பின்பு அவரால் எதுவும் பேச முடியவில்லை.
போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரமன்தீப் சிங் என்பவரை கைது செய்துள்ளனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். புகையிலையை மென்று பொற்கோவில் பகுதியருகே துப்பிய விவகாரத்தில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth killed by chewing tobacco out