ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு.! முழு விவரம் இதோ.. - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதியில் ஒரே கட்டமாக வருகின்ற 13-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் ஓய்.எஸ் .ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று வெளியிட்டுள்ளார். அதில், 

* நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினத்தை மாற்றப்படும். இது மாநிலத்தின் வளர்ச்சி இயந்திரமாக உருவாக்கப்படும். அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், கர்னூலை நீதித்துறை தலைநகராக மாற்றப்படும்.

* நல ஓய்வூதியத்தை ரூ.3,000லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தவும். இது 2028 ஜனவரியில் ரூ.250 ஆகவும், 2029 ஜனவரியில் ரூ.250 ஆகவும் உயர்த்தப்பட்டு மொத்தம் ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்.

* விவசாயிகளுக்கு வழங்கப்படும் வருடாந்திர நிதியுதவியை ரூ.13,500லிருந்து ரூ.16,000 ஆக உயர்ந்தப்படும். வட்டியில்லா பயிர்கடனை தற்போது உள்ள ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.

* பெண்களுக்கான அம்மாவோடிக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதி ஒதுக்கீட்டை ரூ.17,000 ஆக உயர்த்தப்படும். இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்ஸ்யகார பரோசா திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும்.,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YSR Congress Election Manifesto Released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->