விவசாயிகளின் உயிருக்கு மதிப்பில்லையா? - ஓய்.எஸ்.ஆர் கட்சித் தலைவர் ஷர்மிளா பரபரப்புக் கேள்வி.!
YSR leader Sharmila ask Are farmers lives worthless
தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் வெளி மாநில முதல் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்டெட் நகரில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் குறித்து பேசினார். இதை சுட்டிக் காட்டி தெலுங்கானாவில் ஓய்.எஸ்.ஆர். கட்சி தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, "மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியது நல்லது தான். அதேசமயம் தெலுங்கானா மாநிலத்தில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்? என்ற கேள்விக்கும் அவர் பதில் தர வேண்டும்.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் எட்டாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த விவசாயிகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா?. என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
YSR leader Sharmila ask Are farmers lives worthless