சுவையான வாழைப்பழ பணியாரம் - இதோ உங்களுக்காக.!
banana paniyaram recipe
புதிய சுவையில், முதல் முறையாக வாழைப்பழத்தில் பணியாரம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம்
மைதா மாவு
கோதுமை மாவு
சர்க்கரை
பெரிய வெங்காயம்
சின்ன வெங்காயம்
தக்காளி
தேங்காய்
பச்சை மிளகாய்
வற மிளகாய்
பூண்டு
கடுகு
ஏலக்காய் தூள்
பேக்கிங் பவுடர்
கறிவேப்பிலை
எண்ணெய்
நெய்
உப்பு
செய்முறை:-
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலையை போட்டு அதை வதக்கி தக்காளி, வற மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி கடுகு, சின்ன வெங்காயம், வற மிளகாய், கறிவேப்பிலை போட்டு கிளறி அதனை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்த்து கலக்கவும்.
பின்னர் சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு பொடியாக்கி, வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். மேலும், மைதா மாவு, கோதுமை மாவு, மற்றும் நெய்யை சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் பேக்கிங் பவுடரை தண்ணீரில் கரைத்து இந்த கலவையில் ஊற்றி 1 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
இதையடுத்து அடுப்பில் பணியார சட்டியை வைத்து சூடானதும் அதில் இருக்கும் குழிகளில் எண்ணெய்யை ஊற்றி ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் பக்குவமாக ஊற்றி இருபுறமும் வெந்தவுடன் எடுத்தால் சுவையான வாழைப்பழ பணியாரம் தயார்.