காலை உணவு என்ன செய்வது என்று குழப்பமா? பீட்ரூட் மட்டும் போதும்.!
beetroot food
பீட்ரூட்டை காலை உணவாக எடுத்து கொள்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
பீட்ரூட்
தயிர்
உப்பு
எண்ணெய்
கடுகு
உளுந்து
வரமிளகாய்
கறிவேப்பிலை
செய்முறை:-
முதலில் ஒரு இட்லி பாத்திரத்தில் பீட்ரூட்டை தோல் நீக்கி நறுக்கி வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்றாக துருவிக் கொள்ளவேண்டும்.
இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். அதை துருவிய பீட்ரூட்டில் சேர்க்க வேண்டும்.
பின்னர் தயிரை எடுத்து கொஞ்சம் அடித்து, அந்த தாளித்த பீட்ரூட் கலவையில் சேர்த்து போதிய உப்பு போட்டு அப்படியே அதை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.