பல நோய்களுக்கு மருந்தாகும் வெண்டைக்காய்..!
benefits of ladis finger
அமெரிக்கா நாட்டில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் உலகில் பல்வேறு பகுதியில் உள்ள காய்கறிகளை ஆராய்ந்து எந்த காயில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது என்பதை ஆய்வு செய்து 100க்கு 100 மதிப்பெண்கள் வழங்கியுள்ளார்கள். இந்த ஆய்வில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களை கொண்ட காய்கறி பட்டியலில் முதல் மூன்று இடங்களை வெண்டைக்காய், பச்சை பட்டாணி, புரோக்கோலி பிடித்துள்ளது.
அதில், குறிப்பாக வெண்டைக்காய், நீரிழிவு நோய், புற்றுநோய் செல்களை அழிப்பது, ஆஸ்துமா, ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரி செய்கிறது. இந்த வெண்டைக்காயில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ கண் பார்வை குறைபாட்டை சரி செய்கிறது.
![](https://img.seithipunal.com/media/lady-finger-500x500-yf5cv.jpg)
வெண்டைக்காயை பச்சையாக தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வெண்டைக்காயை நன்றாக கழுவி விட்டு சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் ஊற வைத்துவிட்டு தினமும் காலையில் எழுந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
இதில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் உடலில் நீர் குறைபாட்டை சரி செய்யும். சிறுநீரக கற்கள் எளிதில் கரையும். ஆஸ்துமாவிற்கு முக்கிய மருந்தாக இந்த வெண்டைக்காய் இருந்து வருகிறது" என்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.