கத்தரிக்காயில் ரசமா? ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Brinjal rasam recipe in tamil
கத்தரிக்காயில் சுவையான ரசம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய்
சீரகம்
பெருங்காயத்தூள்
கருவேப்பிலை
புளிக்கரைச்சல்,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
வெல்லம்,
கொத்தமல்லி இலை
செய்முறை:
முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் எண்ணெய் தடவி தீயில் சுட்டு எடுத்துக் கொள்ளவும். பிறகு கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கி மசித்து எடுத்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் வெல்லம் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் கருவேப்பிலை சேர்த்து கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி கலந்து விடவும். பின்னர் அதில் புளி கரைச்சல், தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நுரை பொங்கியது அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் ரசம் தயார்.
English Summary
Brinjal rasam recipe in tamil