முட்டைகோஸை வைத்து சட்னி செய்து இருக்கிறீர்களா? அசத்தல் ரெசிபி..!
Cabbage Chilly Chutuny
வழக்கமாக இல்லாமல் வித்யாசமான முறையில் இல்லாமல் வித்யாசமான முறையில் முட்டைகோஸ் சட்னி செய்யலாம். எப்படி என தெரிந்து கொள்ளுவோம்.
தேவையானவை :
முட்டைகோஸ் - 150 கிராம் பச்சை மிளகாய் - 2 உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் புளி - எலுமிச்சை பழம் அளவு உப்பு - தேவைகேற்ப இஞ்சி - சிறு துண்டு எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை :
முட்டைகோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து அது காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாயை ஆகியவற்றை சேர்த்து வாசனை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். வறுத்த அனைத்தும் ஆறியதும் அதனை சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அதன்பின்னர், தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை தாளித்து சட்னியில் கொட்டி சேர்க்கவும்/