சுவையான 'குடைமிளகாய் மசாலா' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal


சுவையான குடைமிளகாய் மசாலா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
குடைமிளகாய் 
தேங்காய் துருவல் 
வேர்க்கடலை 
வெந்தயம் 
சீரகம் 
பட்டை,கிராம்பு 
ஏலக்காய்
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
பூண்டு, தக்காளி 
மிளகாய் தூள் 
மஞ்சள் தூள் 
எலுமிச்சை சாறு 
கஸ்தூரி மேத்தி 
உப்பு, எண்ணெய் 

செய்முறை: 
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொடைமிளகாய் சேர்த்து 15 நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளவும். மற்றொரு கடாயில் வேர்க்கடலை, தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, வெந்தயம், சீரகம், ஏலக்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதுபோல் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், உப்பு, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு 10 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும். 

பின்னர் குடைமிளகாய் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கினால் அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் மசாலா தயார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Capsicum Masala recipe tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->