மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'எக்ஸ்' வலைதள பக்கம் திடீர் முடக்கம்! பின்னணியில் அதிர்ச்சி.!
Marxist Communist Party X website shut down
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் வலைதள பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலைதள பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து பல்வேறு விளம்பரங்களை இந்த வலைதள பக்கத்தில் பதிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மார்க் கட்சியின் எக்ஸ் வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
எனவே அதில் பதிவு செய்யப்படும் செய்திகள் எதுவும் கட்சியைச் சார்ந்தது அல்ல. எக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உள்ளோம். விரைவில் கணக்கு மீட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Marxist Communist Party X website shut down