வெளுத்து வாங்கிய கனமழை... மின்னல் தாக்கி 11 பேர் பரிதாப பலி: மேற்கு வங்காளத்தில் கோர சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் கடந்து செல்ல நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வருவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

கடந்த வாரம் தலைநகர் கொல்கத்தா உள்பட 4 மாவட்டங்களில் கனமழை காரணமாக புதுமண தம்பதி உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். 

இந்நிலையில் மேற்குவங்கம், மால்டா மாவட்டத்தில் நேற்று இரவு கூடிய பலத்தமழை பெய்தது. புயல் காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் பல்வேறு ஒரு தம்பதி உள்பட 11 பேர் உயிரிழந்து விட்டனர். 

மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்க பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மேற்கு வங்காள அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal heavy rains lightning strike 11 people killed 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->