கிறிஸ்துமஸ்க்கு சாக்லேட் வாங்காமல் வீட்டிலேயே செய்யுங்கள்..!
Homemade Chocolate Recipe
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாக்லேட் என்றால் பிடிக்கும். அதுவும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் இனிப்பு சாப்பிட விரும்புவோம். கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுவையான சாக்லேட்டுகள் எப்படி செய்வது என பார்போம்.
தேவையாவனை:
மில்க்மேட் – ஒரு டப்பா,
கொக்கோ பவுடர் – 50 கிராம்,
வெண்ணை – 2 ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் நான்ஸ்டிக் பேனை வைத்து அதில் மில்க்மேட்டை சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். மரகரண்டியை வைத்து நன்றாக கிளற வேண்டும். அது இலகி வரும் நேரத்தில் கோகோ பவுடரை சேர்த்து கலக்க வேண்டும்.
கோகோ பவுடர் மில்க் மேட்டுடன் நன்றாக கலக்கவும். சாக்லேட் கெட்டி பதத்திற்கு வரும் போது அதனுடன் 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். அதனை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் பிரிட்ஜில் வைத்து தேவையான போது பயன்படுத்தலாம்.
English Summary
Homemade Chocolate Recipe