வீட்டிலேயே அப்பளம் செய்யலாமா? எப்படி செய்வது?
how to make appalam in house
சாப்பாட்டிற்கு சைடிஷ் மிகவும் முக்கியம். அதில் அப்பளம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை வீட்டிலேயே எப்படி செய்வது என்று இங்குக் காண்போம்.
தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி
எலுமிச்சம்பழம்
பெருங்காயம்
எள்ளு
தேங்காய் எண்ணெய்
உப்பு
செய்முறை :-
முதலில் அரிசியை தண்ணீரில் நன்கு ஊற வைத்து நீரை வடிகட்டி வாணலியில் போட்டு வறுத்து ஆறவைத்து மாவக அரைத்து கொள்ள வேண்டும். நீரில் தேவையான அளவு உப்பையும், பெருங்காயத்தையும் எடுத்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நீருடன் எள் மற்றும் அரைத்து வைத்த மாவை சேர்த்துப் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டி உரலில் போட்டு அதனுடன் சிறிது எலுமிச்சம்பழச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து இடித்துக் கொள்ளவேண்டும்.
இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் அரிசிமாவில் தோய்த்து அப்பளக் கட்டையினால் உருட்டிக் வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும். பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன் மீது அப்பளங்களைக் காயவிட்டு எடுத்தால் சுவையான அப்பளம் தயார்.
English Summary
how to make appalam in house