டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்..என்ன கரணம் தெரியுமா?
Elon Musk steps down from Trump administration Do you know what the reason?
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதை குறைத்து கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக வரி விதிப்பை அதிகரித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தார்.அந்த வகையில் அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கி அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும் 'டெஸ்லா' நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். அதனை தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக எலான் மஸ்க் பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள் பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது.
இந்தநிலையில் டிரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கியதாக தகவல் வெளியானது .இதனால் நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் 20 சதவீதம்வரை டெஸ்லாவின் லாபம் குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டது . இந்தநிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதை குறைத்து கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்துக்குள் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவேன் எனவும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
English Summary
Elon Musk steps down from Trump administration Do you know what the reason?