வித்தியாசமான கம்பு இட்லி செய்வது எப்படி?
how to make kambu idli
வித்தியாசமான கம்பு இட்லி செய்வது எப்படி?
சிறுதானிய வகைகளுள் ஒன்று கம்பு. கம்பு என்றால் அனைவரின் நினைவிற்கும் வருவது கூழ். ஆனால், இதனை தோசை, களி என்று பல வகைகளில் தயார் செய்யலாம். இது ஒரு புது விதமாக இட்லி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
கம்பு, உளுந்து, வெந்தயம், உப்பு, எண்ணெய்
செய்முறை:-
முதலில், கம்பு, உளுந்து மற்றும் வெந்தயம் உள்ளிட்டவற்றை ஊறவைத்துவிட வேண்டும். இதனை இட்லி மாவு போல் அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைத்துவிடவேண்டும்.
இந்த மாவு நன்கு புளித்தவுடன் எடுத்து இட்லி, தோசை, ஊத்தப்பம், குழிப்பணியாரம், வெங்காய ஊத்தப்பம் என்று எந்த உணவாக வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.