குட்டீஸ் ஸ்பெசல்.! சுவையான நூடுல்ஸ் சப்பாத்தி.!  - Seithipunal
Seithipunal


சப்பாத்தியை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும் என்பதை நாம் அறிவோம், அதனை குழந்தைகள் விரும்பி உண்ணுவதற்கு சப்பாத்தியுடன் நூடுல்ஸை சேர்த்து இந்த முறையில் சமைத்து வழங்கினால் விரும்பி உண்ணுவார்கள்.  

சப்பாத்தி நூடுல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு - ஒரு கிண்ணம்,
நூடுல்ஸ் - ஒரு கிண்ணம்,
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கிண்ணம்,
பால் - 2 தே.கரண்டி,

noodles,
சீரகத்தூள் - கால் தே.கரண்டி, 
கரம் மசாலாத்தூள் - அரை தே.கரண்டி,
தக்காளி சாஸ் - ஒரு தே.கரண்டி,
எண்ணெய், உப்பு - தே.அளவு.

சப்பாத்தி நூடுல்ஸ் செய்முறை: 

எடுத்துக்கொண்ட கோதுமை மாவில் சிறிதளவு பால், சீரகத்தூள், கரம் மசாலா மற்றும் உப்பை சேர்த்து சப்பாத்தி மாவை பிசைவதை போன்று பிசைந்து சுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

அதனைப்போன்று எடுத்துக்கொண்ட நூடுல்ஸை நீரில் வேக வைத்து குளிர்ந்த நீரை கொண்டு அலசி எடுத்து கொள்ளவும், பின்னர் கடாயில் எண்ணெய்யை விட்டு நூடுல்ஸை குடைமிளகாய் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும். 

பிசைந்து வாய்த்த மாவை தேய்த்து சப்பாத்திக்காக தேய்ப்பது போல தேய்த்து, நடுவில் நூடுல்ஸை வைத்து தோசை கல்லில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். சுவையான நூடுல்ஸ் சப்பாத்தி தயார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make noodules sapathi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->