உருளைக்கிழங்கை இப்படியும் செய்யலாமா? - இதோ உங்களுக்காக.!!
how to make potato fry in andira style
உருளைக்கிழங்கை இப்படியும் செய்யலாமா? - இதோ உங்களுக்காக.!!
வெரைட்டி சாதத்திற்கு ஒரு முறையான சைடிஷ் என்றால் அது உருளைக்கிழங்கு தான். குழந்தைகள் இந்த உருளைக்கிழங்கை நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியான இந்த உருளைக்கிழங்கை ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:-
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், உப்பு, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலை, வறுத்த வேர்க்கடலைப் பொடி
![](https://img.seithipunal.com/media/potato fry 1-hucyu.png)
செய்முறை :
உருளைகிழங்கை சுத்தம் செய்து கட்டட வடிவில் வெட்டி வேக வைக்கவும். பிறகு ஒரு கடாய் எடுத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு காய்ந்த மிளகாய், உளுத்த பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதில், வெட்டி வைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,தக்காளி ,மஞ்சள் தூள்,கொத்தமல்லி தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதையடுத்து வேகவைத்த உருளைக்கிழங்கு அதில் போட்டு வதக்கவும்.
பின்னர் வறுத்த வேர்க்கடலைப் பொடி தூவி,கொத்தமல்லி இலைகள் கொஞ்சம் சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் தற்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு பொரியல் தயார்.
English Summary
how to make potato fry in andira style