புதிய ஸ்டைலில் சிந்தாமணி அப்பம் - எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


தினமும் இட்லி, தோசை என்று சாப்பிடுவது ஒரு வித வெறுப்பை ஏற்படுத்திவிடும். அப்படி இருப்பவர்களுக்கு அரிசி, பருப்பை வைத்து சிந்தாமணி அப்பம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம். 

தேவையான பொருட்கள்:-

அரிசி, பருப்பு, வெங்காயம், வரமிளகாய், உப்பு, எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள்.

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்பை தண்ணீர் ஊற்றி சுமார் ஆறு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

இதையடுத்து ஊறிய பருப்பு, அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிக்ஸியில் போட்டு உப்பு, வரமிளகாய் சேர்த்து கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை நன்கு புளிக்க வைக்க வேண்டும். 

இதையடுத்து ஒரு அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதில், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி விட வேண்டும் 

இந்த கலவையை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து ஒரு பணியார சட்டி வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் குழிகளில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவினை ஊற்றி ஒரு பக்கம் வெந்த பிறகும் மறுபக்கம் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்து விட்டால் சிந்தாமணி அப்பம் தயார்.                    
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make sinthamani appam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->