காலையிலேயே என்ன சட்னி செய்யுறதுனு குழப்பமா? - இதோ உங்களுக்காக.!
how to make sow sow chutny
காய்கறி வகைகளில் ஒன்றானது சௌசௌ. இதை சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காது. ஆனால் இந்த சௌசௌ காயை சாப்பிடுவதன் மூலம் தலை முதல் கால் வரை ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது .
அதனால், இந்த சௌசௌ காயை சட்னி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர்களும் சாப்பிட முடியும். தேவையான பொருட்கள்:- சௌசௌ, சின்ன வெங்காயம், தேங்காய், பொட்டு கடலை, கருவேப்பிலை, வரமிளகாய், புளி, எண்ணெய்.
முதலில் சௌசௌ காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சௌசௌ காய், சின்ன வெங்காயம், வர மிளகாய், கருவேப்பிலை, புளி, பொட்டுக்கடலை உள்ளிட்டவை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
சௌசௌ காயில் இருக்கும் நீர் அனைத்தும் இறங்கிய பின் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு இதனை ஆற வைத்து மிக்ஸியில் எடுத்து அரைத்தால் சுவையான சௌசௌ சட்னி தயார்.
English Summary
how to make sow sow chutny