சுவையான ஆரோக்கியமுள்ள வரகு கேசரி.! செய்வது எப்படி.?
How to make tasty Varagu kesari
சுவையான வரகு கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
வரகு - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி -10
கிஸ்மிஸ் -10
கேசரி கலர் - 2 சிட்டிகை
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி, கிஸ்மிஸ்ஸை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதே நெய்யில் வரகை வறுத்துக்கொண்டு, மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த ரவையை ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்றாக வெந்தவுடன் கேசரி கலர், சர்க்கரை மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும்.
பின்பு கேசரி பதத்துக்கு வந்தவுடன் முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி சேர்த்தால் சுவையான வரகு கேசரி ரெடி.
English Summary
How to make tasty Varagu kesari