சத்தான சுவையான கறிவேப்பிலை சாதம்.! செய்வது எப்படி.!!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
உதிராக வடித்த சாதம் - 2 கப், 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், 
உப்பு - தேவைக்கு.
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், 
நெய் - 2 டேபிள் ஸ்பூன், 
மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன், 
சீரகம் - 2 டீஸ்பூன், 
முந்திரி - 4, 
கறிவேப்பிலை - 1 கப், 
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், 
மிளகாய் வற்றல் - 6.

kariveppilai rice,seithipunal

செய்முறை: 

வெறும் வாணலியில் கறிவேப்பிலையை சுத்தம் செய்து சிறிது சிறிதாகப் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். 

பின்னர், மிளகாய் வற்றல், முந்திரி, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து எடுத்து ஆறவைத்து கொள்ளவும். 

இவை, இரண்டும் நன்றாக ஆறிய பின்னர், கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் பொடித்து எடுத்து கொள்ளுங்கள். 

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு உள்ளிட்டவற்றை போட்டு தாளித்து பின் சாதம், பொடித்த பொடி, உப்பு சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான கருவேப்பிலை சாதம் ரெடி.!! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare kariveppilai rice


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->