மரண மாஸ்! தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அப்டேட்! - Seithipunal
Seithipunal


வருகின்ற 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, விழுப்புரம் வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த மாநாட்டின் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது.

மதில் சுவர் போன்று மாநாட்டின் முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் இரு கால்களை தூக்கி யானைகளின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இரு யானைகளுக்கு நடுவில் மேலே விஜயின் புகைப்படம் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், மாநாட்டு பந்தலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை 30 அடி உயரத்தில் கட்சியின் கொடியுடன் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. 

மொத்தமாக மாநாடு நடக்கும் இடத்தில் 600க்கும் மேற்பட்ட கம்பங்களில் கட்சியின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. மேலும் மாநாடு முழுவதும் 15,000 led விளக்குகள் பொருத்தப்பட்டு, 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் கட்சியின் தலைவர் விஜய் செல்வதற்கு என்று சென்று வருவதற்கு என்று சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தனியாக சிறப்பு சாலை ஒன்றும் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாநாட்டில் காமராஜர், பெரியார், நடிகர் விஜய், அம்பேத்கார் உள்ளிட்ட நான்கு பேரின் உருவ கட்டவுட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநாட்டு முகப்பில் அமைக்கப்பட்டு வரும் மதில் சுவரில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் சுதந்திர போராட்ட விடுதலை தலைவர்களின் புகைப்படங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Maanadu Update


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->