எவ்வளவு மழை வந்தா என்ன? தண்ணி தேங்க கூடாது! இல்லையா.. மருத்துவமனையை இழுத்து மூடுங்க - கொந்தளித்த உயர்நீதிமன்ற கிளை! - Seithipunal
Seithipunal


எவ்வளவு மழை வந்தாலும் அரசு மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்க கூடாது, அப்படி இல்லை என்றால் மருத்துவமனையை இழுத்து மூடி விடுங்கள் என்று, சென்னை உயர்நீதிமன்ற கிளை காட்டமாக தெரிவித்துள்ளது.

மதுரை சேர்ந்த மேரி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

அதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 315 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 

ஆனால், மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுநீர் & மழைநீர் வடிகால் வசதி முறையாக இந்த கட்டிடத்திற்கு செய்யப்படவில்லை.

இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிப்பறை, காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று, அந்த வழக்கில் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், எவ்வளவு மழை வந்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் இனி தேங்கக் கூடாது. அப்படி இல்லை என்றால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் என்று கடுமையாக தெரிவித்தனர். 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனர், மதுரை ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் உள்ளிட்டவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகின்ற நவம்பர் மாதம் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai HC Condemn to TNGovt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->