பொடுகு தொல்லையா? - இந்த ஹேர் பேக்கை செய்து பாருங்கள்.!
how to remove dandruff
தலை முடி பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று பொடுகு தொல்லை. இதனை இயற்கை முறையில் சரி செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையானபொருட்கள்:-
கொய்யா இலை
துளசி
கடலை மாவு
செய்முறை:-
முதலில் துளசி மற்றும் கொய்யா இலையினை நன்றாக கழுவி ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து சாறு பிழிந்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ள வேண்டும். சாருக்கு ஏற்றவாறு தேவையான அளவு கடலை மாவு சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்வதற்கு முன்பாக தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தடவி சிக்கு இல்லாமல் சீவிய பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
சுமார் 20 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு முடியினை அலசி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும் பொடுகு குறைந்து விடும்.