ஆரோக்கியமுள்ள நாவல் பழ மில்க் ஷேக்.! செய்வது எப்படி.?
Jamun fruit milk shake
ஆரோக்கியமுள்ள நாவல் பழ மில்க் ஷேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
பால் -1 கப்
நாவல் பழம் - 26
நாட்டு சர்க்கரை -1 டேபிள்ஸ்பூன்
பாதாம் - 6
செய்முறை:
முதலில் நாவல் பழத்தை கொட்டை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் நாவல்பழம், ஊற வைத்து தோல் உரித்த பாதாம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
பின்பு பால் சேர்த்து ஒரு முறை மிக்சியில் அடித்தால் ஆரோக்கியமுள்ள நாவல் பழம் மில்க் ஷேக் ரெடி.