கேசரி பிரியரா நீங்கள்.. சற்றே வித்தியாசமான ஜவ்வரிசி கேசரி..!
javvarisi Kesari
வழக்கமாக ரவாவில் கேசரி செய்திருப்போம். ஆனால், ஜவ்வரிசியில் கேசரி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? உங்களுக்காக சூப்பரான ரெசிபி.
தேவையாவை :
ஜவ்வரிசி - கால் கிலோ
சர்க்கரை - 150 கிராம்
குங்குமப்பூ - 1 கிராம்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - விருப்பத்திற்கேற்ப
நெய் - தேவையான அளவு
செய்முறை :
ஜவ்வரிசியை ஊறவைத்து கொள்ளவும். தண்ணீர் வடித்து கொள்ளவும்.பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் வடிகட்டிய ஜவ்வரிசியை போட்டு நன்றாக கிளறவும். ஜவ்வரிசி கண்ணாடி பதம் வரும் வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளுங்கள். அதில், சர்க்கரையை சேர்த்து கிளறி கொள்ளவும். அதன்பின்னர், சிறிது நெய், ஊறவைத்த குங்குமப்பூவை சேர்த்து கிளறவும்
சர்க்கரை கரைந்து திக்கான பதம் வந்ததும் அதில் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து இறக்கினால் சுவையான ஜவ்வரிசி கேசரி தயார்.