இரும்பு சத்து அதிகம் நிறைந்த முருங்கை கீரை, வித்யாசமான பொரியல் செய்து கொடுத்து அசத்துங்கள்..!
Murungai Poriyal Recipe
முருங்கை கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்ளும் போது இரும்பு சத்தை அதிகரிக்க உதவும். வழக்கமான பொறியல் போல அல்லாமல் சற்றுவித்யாசமாக பொரியல் செய்து கொள்ளலாம். எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.
தேவையானவை:
முருங்கைக் கீரை - 1 கப்
சின்ன வெங்காயம் - 15
தேங்காய் எண்ணெய் - 1 tsp
தேங்காய் - 3 tsp
உப்பு - தே.அ
கடுகு - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 3
செய்முறை :
கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்துக்கொள்ளுங்கள். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
அடுத்ததாக முருங்கைக்கீரை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வேகவைத்து கொள்ளுங்கள். இறக்குவதற்கு முன் வறுத்த தேங்காய் சேர்த்து இறக்கலாம். சூப்பரான முருங்கை பொரியல் தயார்.