தினமும் ஒரே சட்னி செய்து போர் அடிக்கிறதா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


தினமும் ஒரே சட்னி செய்து போர் அடிக்கிறதா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க.!

ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள் என்று அனைத்தையும் கொண்டுள்ளது தான் நெல்லிக்காய். அதனால், இந்த நெல்லிக்காயை சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.

இது, உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தருவதுடன், வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். அதனால், மக்கள் இந்த நெல்லிக்காயை வைத்து துவையல், ஊறுகாய் என்று செய்வார்கள். ஆனால், இந்த நெல்லிக்காயை வைத்து சட்னி செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 10, கொத்த மல்லித் தழை - 1 கப், கறிவேப்பிலை - ¼ கப், பச்சை மிளகாய் - 7, இஞ்சி - சிறு துண்டு, சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, தேங்காய் - சிறு துண்டு, கடுகு - ½ டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து கடாயில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை உள்ளிட்டவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்க வேண்டும். 

பிறகு அதில், நெல்லிக்காய் மற்றும் கொத்த மல்லித் தழை சேர்த்து கலந்து பசை போல அரைத்துக் கொள்ளவும். கடைசியாக உப்பு சேர்த்துக் கலக்கவும். மற்றொரு கடாயில், சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.

இந்த தலைப்பை தயாரித்து வைத்திருக்கும் கலவையில் கொட்டிக் கிளறினால் சுவையான நெல்லிக்காய் சட்னி ரெடியாகும். இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nellikai kothamalli chutny recipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->