உடலில் கெட்ட கொழுப்பு படிவதை தவிர்க்க வேண்டுமா? அப்போ இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!
Parli Keerai soup
பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள் படியாமல் தடுத்து உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ள உதவும். பார்லியில் சுவையான சூப் தயார் செய்து சாப்பிட்டலாம்.
தேவையானவை :
கம்பு - 1 கப்
பார்லி - 2 கப்
வெங்காயம் - 1
செலரிக் கீரை - 1
தக்காளி - 1
முட்டைக் கோஸ் - சிறிதளவு
உருளை - 1
கேரட் - 1
ஓமம் - 1 சிட்டிகை
துளசி - 1 சிட்டிகை
உப்பு - தே. அளவு
மிளகுத் தூள் - தே. அளவு
செய்முறை :
செலரிக்கீரையை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.கேரட், உருளை, கோஸ் ஆகியவற்றையும் நன்கு கழுவி சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து கொள்ளுங்கள். பார்லி, கம்பை ஊறவைத்து கொள்ளுங்கள். அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில், வெங்காயம், செலரி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
அதில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்துகம்பையும், பார்லியையும் நன்கு களைந்து அடுப்பை சிம்மில் வைத்து மிதமான தீயில் வேகவைக்கவும். அதில் உப்பு, மிளகுத் தூள், ஓமம், துளசி சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும் பார்லி நன்றாக வெந்ததும் பரிமாறலாம்.