என்னது அன்னாசியில் பார்பிக்யூவா? அட்டகாசமான ரெசிபி..! - Seithipunal
Seithipunal


பார்பிக்யூ மற்றும் கிரில் போன்றவற்றை கூறினால் நமக்கு சிக்கன் தான் முதலில் நினைவிற்கு வரும். ஆனால், அன்னாசி பழத்தில் பார்பிக்யூவை பெரும்பாலும் சாப்பிட்டிருக்க மாட்டோம். அதனால், அன்னாசி பார்பிக்யூ எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

நன்றாக பழுத்த அன்னாசிப்பழம் - 1
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுதூள் - கால் தேக்கரண்டி
வறுத்து அரைத்த சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
லவங்கப்பட்டை தூள் - அரை தேக்கரண்டி
பார்பிக்யூ குச்சிகள் - தேவையான அளவு
உப்பு – சுவைக்கு

செய்முறை:

அன்னாசி பழத்தில் தோல் நீக்கி சதுர வடிவில் வெட்டி கொள்ளவும். சர்க்கரையை மிக்சியில் போட்டு தூளாக பொடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள், சர்க்கரை, லவங்கப்பட்டை தூள், தக்காளி சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையில் அன்னாசி பழத்தில் கொட்டி சிறிது எலுமிச்சை பழ சாறு சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ளவும். இதனை காற்றுபுகாதவாறு ஒரு டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைக்கவும்.

அடுத்த நாள் காலையில் பார்பிக்யூ குச்சியில் சொருகி அடுப்பில் கிரில் செய்வதற்கான வாணலியை வைத்து அது சூடானதும் வெண்ணெயை போட்டு உருக வைக்கவும். பின்பு அன்னாசி பழத்தை வாட்டி எடுத்தால் சுவையான பார்பிக்யூ தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pineapple barbecue recipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->