மொறுமொறுவென இறால் வறுவல் செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


கடல் உணவுகளில் மிகவும் சுவையானவற்றில் இறால் ஒன்று. அனைவரும் விரும்பும் வகையில் இறாலில் வறுவல் எப்படி செய்வது என பார்ப்போம்.

தேவையானவை :

இறால் - ½ கிலோ

தேங்காய் எண்ணெய் - 1 ½ டீஸ்பூன்.

மிளகாய் தூள் - 1 ½ தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

உப்பு - ½ தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி இலைகள் - 2-3 டீஸ்பூன், நறுக்கியது

செய்முறை :

இறாலை சுத்தம் செய்து வைத்துகொள்ளுங்கள். (சுத்தம் செய்யும் போது அதன் வாலை மட்டும் எடுக்க கூடாது).  அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி மிளகாய் தூள் , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடுங்கள். (குறைவான தீயில் வைத்து கொள்ளுங்கள்).

இதனுடன் இறாலை சேர்த்து நன்கு பிரட்டி எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு நன்கு வறுக்கவும். 2 நிமிடங்கள் கழித்து எடுத்தால் மொறுமொறுவென இறால் வறுவல் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prawn Fry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->