வீட்டில் கத்திரிக்காய் இருக்க அப்போ இதை செய்து பாருங்க.!!
recipe of brinjal rasam
வீட்டில் கத்திரிக்காய் இருக்க அப்போ இதை செய்து பாருங்க.!!
இதுவரைக்கும் நாம் அனைவரும் தக்காளி ரசம், மிளகு ரசம், வெங்காய ரசம் என்று தான் வைத்து சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் முதல் முறையாக கத்தரிக்காய் ரசம் வைப்பது எப்படி? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய், எண்ணெய், கடுகு, பட்ட மிளகாய், சீரகம், பெருங்காய தூள், கறிவேப்பிலை, புளி கரைசல், வெங்காயம், பச்சை மிளகாய், வெல்லம்
கொத்தமல்லி இலை
செய்முறை:
முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் எண்ணெய் தடவி அடுப்பை பற்ற வைத்து குறைவான தீயில் கத்தரிக்காவை சுட்டு எடுத்து கொள்ளுங்கள். பிறகு, கத்திரிக்காயில் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும் காம்பினையும் நீக்கி விட்டு, ஒரு கரண்டியினை பயன்படுத்தி கத்தரிக்காவை மசிக்க வேண்டும்.
அதன் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனுடன் கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து 1 கப் அளவிற்கு தண்ணீரும் சேர்த்து கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விட்டு, பட்ட மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்தால் சுவையான கத்தரிக்காய் ரசம் தயார்.