சுவையான 'செவ்வாழை பழ கேக்' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


சுவையான செவ்வாழை பழ கேக் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
மைதா 
கோதுமை மாவு
கோகோ பவுடர் 
நாட்டுச் சர்க்கரை 
செவ்வாழை 
வெண்ணெய் 
பேக்கிங் பவுடர் 
பேக்கிங் சோடா 
வெண்ணிலா எசன்ஸ் 
பால் 
உப்பு 
நட்ஸ் 
சாக்கோ சிப்ஸ் 

செய்முறை: 
முதலில் மைதா மாவு, கோதுமை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு அனைத்தையும் தேவையான அளவு எடுத்து சலித்து வைத்துக் கொள்ளவும். 

செவ்வாழை பழத்தை தோல் உரித்து நன்றாக மசித்து கொள்ளவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பிறகு சலித்து வைத்துள்ள மாவு கலவை, பால் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், நறுக்கி வைத்துள்ள நட்ஸ், சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து இந்த கலவையை ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 190 டிகிரியில் 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். 

கேக் நன்றாக ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும் அவ்வளவுதான் சுவையான செவ்வாழைப்பழ கேக் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red banana cake recipe tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->