சேமியாவில் இந்த ரெசிபி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?
Semiya Custer Recipe in Tamil
பொதுவாக கஸ்டர்டுகளை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்போம். அதனை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை :
நெய் - 1 tsp
சேமியா - 1/4 கப்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1/4 கப்
கர்ஸ்டர்ட் பவுடர் - 1 tsp
பால் - 1/2 கப்
சப்ஜா விதை - 1 tsp
நட்ஸ் - 2 tsp
மாதுளை , திராட்சை , ஆப்பிள் - 1/2 கப்
செய்முறை :
சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். பாலை காய்ச்சி வைத்து கொள்ளுங்கள். பாலை சேமியாவில் ஊற்றி கொதிக்கவிடுங்கள். சேமியா குழைய வேகாமல் பார்த்து கொள்ளுங்கள்.
கஸ்டர்ட் பவுடரை அரை கப் பாலில் கட்டிகளின்றி கரைத்து அதனை கொதிக்கும் பாலில் சேர்க்க வேண்டும். விடாமல் பால் கேட்டி பதம் வரும் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
பழங்கள், நட்ஸ் மற்றும் ஊற வைத்த சப்ஜா விதைகளை தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி பவுலில் கஸ்டர்ட் இரண்டு ஸ்பூன் ஊற்றுங்கள். பின் திராட்சை மற்றும் நட்ஸ் சேர்த்து கஸ்டர்ட் சேருங்கள்.
அதில், பழங்களை சேர்த்து மேலே சப்ஜா விதைகளை சேர்க்கவும். அதன் மேலே சேமியா வென்னிலா ஐஸ் கிரீம் , நட்ஸ் சேர்த்து பரிமாறலாம்.
English Summary
Semiya Custer Recipe in Tamil