அரிசி மாவு அடை போர் அடித்து விட்டதா? அப்போ திணையில் சுவையான அடை செய்து கொடுங்கள்..!
Thinai adai recipe
வழக்கமாக அடையை அரிசி மாவில் தான் செய்வோம்.திணையில் அடை மாவு அரைத்து அதில் முருங்கைக்கீரை சேர்த்து சூடாக அடை சுட்டு கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் அசந்து போய்விடுவர். அதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.
தேவையானவை :
திணை - 1கப்
கடலை பருப்பு - 1/2 கப்
கருப்பு உளுந்து - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
மிக்ஸ் செய்ய :
வெங்காயம் - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 tsp
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
உப்பு - தே.அ
செய்முறை :
திணை, கடலைப் பருப்பு, உளுந்து, துவரம் பருப்பை ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.பின் ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு மிக்ஸ் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
அடை பதம் வந்ததும் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் அடையாக ஊற்றி எண்ணெய் சுற்றிலும் ஊற்றி மொறுவலாக சுட்டு எடுத்து பரிமாறலாம்.