2021 கடந்து வந்த பாதை.. வரலாறு படைத்த அதிபரின் நியமனம்.. அப்படி என்ன நியமனம் அது?
2021 Memories
மார்ச்- ஆஸ்திரேலிய நாட்டுக்கான இந்திய தூதராக மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரி மன்பிரீத் வோரா நியமிக்கப்பட்டார்.
பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக மாடம் வெங்கட ராவ் பொறுப்பேற்றார்.
இந்திய பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக ஜெய்தீப் பட்நகர் பொறுப்பேற்றார்.
நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் இந்திய நிறுவனம் தனது துணை தலைவர் மற்றும் முதன்மை அலுவலராக நவரின் ஹாசனை நியமித்தது.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் குற்றவியல்துறையின் சிறப்பு உதவியாளர்களாக இந்திய வம்சாவளியினை சேர்ந்த சிராக் பெயின்ஸ் ரூ ப்ரோனிதா குப்தா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றார்.
இந்திய கணக்காய்வர்-தலைமை தணிக்கையர் கிரிஷ் சந்திர முர்மு, ஐக்கிய நாடுகளவையின் வெளி தணிக்கையாளர்களின் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகார இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் டெரிடோரியல் ஆர்மியில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காசநோயை ஒழிப்பதற்கான பங்குதார வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
திருநங்கை ரேச்சல் லெவின் என்பவரை அமெரிக்காவின் முதல் திருநங்கை அமைச்சராக நியமித்து அதிபர் ஜோ பைடன் வரலாறு படைத்தார்.
ஆதார் அட்டைகளை நிர்வகிக்கும் தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம் செய்யப்பட்டார்.
ஏப்ரல்- டாஃபே நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக நியமிக்கப்பட்டார்.
குஜராத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி காந்த்வாலா, பிசிசிஐ-யின் புதிய ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் கே.என்.செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டார்.
இந்திய சிறு தொழில்கள் மற்றும் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக எஸ்.ராமன் நியமிக்கப்பட்டார்.
நாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார்.
தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி நியமிக்கப்பட்டார்.
சிட்பி வங்கி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவராக சிவசுப்ரமணியன் ராமன் பொறுப்பேற்றார்.
மத்திய நிதித்துறை செயலராக தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டார்.