நடிகை குஷ்பு சொன்ன 'ஹேர் பேக்' ரகசியம்... 'மிஸ்' பண்ணிடாதீங்க..!! - Seithipunal
Seithipunal


1990களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு நடிகையாகத் திகழ்ந்தவர் குஷ்பு. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து இந்திய அளவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.

ஆரம்ப காலங்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து வந்த குஷ்பு தற்போதும் அக்கா, அண்ணி உள்ளிட்ட வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது பாஜகவில் இணைந்திருக்கும் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, வீட்டிலேயே தலை முடியை பராமரிப்பது எப்படி என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, சில துளிகள் ரோஸ் மேரி அல்லது லாவண்டர் எண்ணையுடன், சிறிதளவு கருப்பு காபி அல்லது தேநீர் கலந்து, அத்துடன் மருதாணி பேஸ்டையும் கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இந்தக் கலவையை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலை முடியை அலசவும். அதன் பிறகு ஒரு நல்ல கண்டிஷனரை பயன்படுத்தினால் தலைமுடி பட்டு போல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த மருதாணிக் கலவையை தலையில் தடவுவதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெய் தடவி தலைமுடியில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இது தான் முக்கியமான விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Kushboo Tells About Her Secret Hair Pack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->