உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க.... நம் பாரம்பரியம் மிக்க நீராகாரத்தில் குவிந்து கிடக்கும் நன்மைகள்.!
Benefits of our traditional Nirakaram
கோடை வெயிலுக்கு நம் தாகத்தை தணிப்பதற்கு உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கும் நம் பாரம்பரிய உணவான நீராகாரம் உதவுகிறது. நமது பாரம்பரிய நீராகாரத்தில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்று இந்த பதிவில் பார்ப்போம்.
நாம் நீராகாரத்தை எடுத்துக் கொள்ளும் போது நம் குடலிலிருக்கும் பாக்டீரியாக்கள் சிறப்பாக செயல்பட தொடங்கும் இதன் காரணமாக நமது உடலின் செரிமானம் மேம்படுவதோடு நல்ல சீரான குடல் இயக்கத்திற்கும் வழி வகுக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் நீராகாரம் சாப்பிட்டு வர நமது உடலின் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுவதோடு உடல் நல்ல நீரேற்றம் அடைகிறது மேலும் இது உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கும் உதவுகிறது.
நீராகாரம் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்குரிய ஒரு சிறந்த உணவாகும். இந்த உணவை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது. நமது உடல் சூட்டை தனித்து உடல் குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. இதன் காரணமாக உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களான வயிற்றுப்போக்கு, கண் எரிச்சல், வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற நோய்களிலிருந்து நம் உடலை காத்துக் கொள்ளலாம்.
இதிலிருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்தின் காரணமாக மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதோடு நம் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை மேம்படுத்தும். மேலும் இது உடல் எடையை குறைப்பதற்கும் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கும் மிகவும் உதவுகிறது.
தினமும் நீராகாரம் சாப்பிடும் பழக்கம் உடையவர்களுக்கு சருமம் மிகவும் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். மேலும் இது கோடை காலங்களில் ஏற்படும் தோல் அலர்ஜி போன்ற நோய்கள் நம்மை தாக்காமல் தடுக்கும். நீராகாரத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் வராது.
English Summary
Benefits of our traditional Nirakaram