பிராமரி பிராணாயாமம் செய்வதால் இத்தனை நன்மைகளா?..! - Seithipunal
Seithipunal


பிராமரி பிராணயாமத்தின் மூலம் நமது உடலில் நைட்ரிக் அமில உற்பத்தி அதிகரிக்கிறது.

நைட்ரிக் அமிலம் தான் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை கடத்த வல்லது. நைட்ரிக் அமிலம்  உற்பத்தி குறைவதால் மூளை, இருதயம், காது இவற்றின் இரத்த ஓட்டம் பாதிப்படையும். இந்த நைட்ரிக் அமில உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் பிராமரி பிராணாயாமத்துக்கு உண்டு.

எப்படி செய்யலாம்:

விரிப்பில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகு நேராக இருப்பதை உறுதி செய்யவும்.

நிதானமாக இரண்டு அல்லது மூன்று முறை சாதாரணமாக மூச்சை இழுத்து விடவும்.
பின், மூச்சை நன்றாக இழுக்கவும். மூச்சை வெளியேற்றும் போது, ‘ம்ம்ம்’ என்று வாயை திறக்காமல் குரல் ஒலிக்கவும். உங்கள் தொண்டையில் அதிர்வை உணர்வீர்கள்.
அய்ந்து முதல் ஆறு முறை வரை இவ்வாறு செய்யவும்.

பின் சிறிது நேரம் சாதாரண மூச்சில் இருந்த பின் மீண்டும் அய்ந்து அல்லது ஆறு முறை பிராமரி பிராணயாமா செய்யவும்.

பயன்கள்:

இது நமது தொண்டை நலத்தை பாதுகாக்கிறது. தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இது போன்ற பல நன்மைகள் பிராமரி பிராணயாம் செய்வதால் கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhramari Pranayama


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->