நாவூறும்.. செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு.! சிம்பிளா சுவையாக செய்யலாம்.!
Chettinad Oil Brinjal Kulambu Recipe
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 8,
சின்ன வெங்காயம் - 20,
தக்காளி -2,
பூண்டு - 20 பல்,
மிளகு சீரகம் - 4 ஸ்பூன்,
வெந்தயம் -ஒரு ஸ்பூன்,
மிளகாய் தூள், மஞ்சள் தூள், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு
கடுகு - ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் - 200 ml.
தேங்காய் துருவல் - 1/2கப்,
செய்முறை :
கத்தரிக்காயை கழுவி, நான்காக கீரி அதை எண்ணெயில் பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் , மிளகு,சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்சியில் அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, பெருங்காயத்தூள், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் மிக்ஸியில் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கி வந்த பின்பு புளியை கரைத்து ஊற்றி, சிறிதளவு தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக கொதி வந்த பின் பொறுத்து வைத்த கத்திரிக்காய் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கி இறக்கும்போது கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
இப்பொழுது சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார். இதை சாதத்தில் போட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
English Summary
Chettinad Oil Brinjal Kulambu Recipe