தப்பி தவறி கூட மீண்டும் சுட வைத்து சாப்பிட கூடாத உணவுகள்.! உயிர் போக கூட வாய்ப்பு.!  - Seithipunal
Seithipunal


பலரும் சமைத்து சாப்பிட்டு மீதமான உணவை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவார்கள். உணவை சூடாக சாப்பிட வேண்டியது நல்ல விஷயம் தான் என்றாலும் சில உணவுகளை மீண்டும் சுட வைத்து சாப்பிடும் போது ஃபுட் பாய்சன் ஆகி உயிரையே எடுக்கக்கூடிய தன்மை கொண்டது என்பது உங்களுக்கு தெரியுமா.? அந்த உணவுகள் எவை என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

கீரை : கீரையில் அதிகப்படியான நைட்ரேட் மற்றும் இரும்பு சத்து இருக்கிறது. இதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது குடல் புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதால் உடலில் தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

சிக்கன் : இதில் அதிகப்படியான புரதச்சத்து இருக்கிறது. செரிமானமாக சிக்கன் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இதை இரண்டாவது முறை சுட வைத்து சாப்பிடும் போது அது ஃபுட் பாய்சன் ஆகிவிடும். பொதுவாக சிக்கன் மட்டும் என்றில்லாமல் இறைச்சி அனைத்தையும் மீண்டும் சூடு படத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முட்டை : மொட்டை அதிக புரோட்டின் கொண்ட உணவு. நன்றாக வேக வைத்த முட்டை அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக் கூடாது.

அரிசி சோறு : நாம் அதிகப்படியாக உணவில் சேர்த்துக் கொள்ளும் உணவுப் பொருள் இதுதான். இதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது நச்சுத்தன்மை அதிகரிக்கும்.

காளான் : காளானை பொதுவாக சமைத்தவுடன் சாப்பிட்டு விடுவது நல்லது. இதை தாமதமாக சாப்பிடுவதே நல்லது இல்லை. அப்படி இருக்கும்போது மீண்டும் சூடு படத்தை சாப்பிடுவது மிகப்பெரிய ஆபத்தை தரும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't heat some foods


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->