நாவிற்கு சுவையான நாவல் பழத்தை எப்படி எல்லாம் சாப்பிடலாம்?! வாங்க பார்ப்போம்! - Seithipunal
Seithipunal


மனிதனுக்கு ஏற்படும் நோய்களில் மிகவும் அபாயகரமானதாகவும்   பெரும்பாலானோருக்கு ஏற்படும் வகையிலும் இருக்கும் நோய் நீரிழிவு நோயாகும். ஆரோக்கியமான பொருட்களை  உணவுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த நோய்களின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியும். அதேபோன்று நீரிழிவு நோய்க்கு மருந்தாக இருக்கக்கூடிய ஒரு பழம்தான் நாவல் பழம். நார்ச்சத்து, புரத சத்து, வைட்டமின்கள், கால்சியம், ஆண்டி டாக்ஸிக், என பலவகை  சத்துக்களை கொண்டுள்ள நாவல் பழத்தை ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

நாவல்பழ சாலட்:

நாவல் பழத்தை சாலடாக செய்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது. பழங்களை மிக்ஸ் செய்து செய்யப்படும்  ஃப்ரூட் சாலட்டில் நாவல் பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டு பயன்படுத்தலாம்.

நாவல் பழ ஃபிஸ்:

ஃபிஸ் செய்து சாப்பிடுவது நாவல் பழத்தின் சுவையை அதிகரிப்பதோடு புதிய அனுபவத்தையும் கொடுக்கிறது. இதற்கு நாவல் பழத்தை முதலில் ஜூஸ் செய்து வைத்துவிட்டு எலுமிச்சை சோடாவை ஊற்றி அதனுடன் நாவல் பழ ஜூஸ் கலந்து குடிக்க இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

நாவல் பழ ஜூஸ்:

நாவல் பழம் குளுக்கோசை உடலில் கட்டுப்படுத்த வல்லது. இதனை ஜூஸ் செய்து குடிக்க அதிலிருக்கும் விதையை நீக்கி விட்டு நன்றாக மிக்ஸியில் அடித்து  அதனுடன் கருப்பு உப்பு  மற்றும் தேன் கலந்து சாப்பிட சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

நாவல் பழத்தை சாப்பிடுவதற்கு பல முறைகள் இருந்தாலும் அதனை நேரடியாக சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கக் கூடியது. இதனை நேரடியாக சாப்பிடும் போது அதன் கலோரி குறைவு. நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது ரத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய முக்கியமான ஒரு உணவுப் பொருளாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eat jamun fruit and control the diabetes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->